Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தண்ணீர் பிடிப்பதில் தகராறு… மருமகளிடம் கோபித்துக் கொண்டு… மாமியார் செய்த செயல்…!!

குடும்பத் தகராறில் பெண் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெண்டிபாளையம் ஆற்று கரையோரத்தில் பெண் சடலம் ஒன்று கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் உயிரிழந்த பெண் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த செங்கோட்டுவேல் என்பவரது  தாய் மணி(58) என்பது தெரிய வந்தது. கடந்த 2ஆம் தேதி செங்கோட்டுவேலுவின் தாய்க்கும் – அவரது மனைவிக்கும் இடையே தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த மணி தனது மருமகளிடம் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில்  நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பிவராததால் அவரை பல இடங்களில் செங்கோட்டுவேல் தேடியுள்ளார். ஆனால் அவரால்  மணியை கண்டுபிடிக்க முடியவில்லை.இதனை தொடர்ந்து தாயை  கண்டுபிடித்து தருமாறு செங்கோட்டுவேல் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையே வீட்டை விட்டு வெளியே சென்ற மணி  காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதால் அவரது உடல்  அருகே உள்ள வெண்டிபாளையம்  ஆற்றின் கரையோரத்தில் ஒதுங்கியது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தீவிர  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |