டிஜிட்டல் நிதிச் சேவை தளமான பேடிஎம் எந்தவொரு சொத்து அடமானம் இல்லாமல் ரூ.2 லட்சம் வரை எம்.எஸ்.எம்.இ வியாபாரிகள், சம்பளதாரர்களுக்கு கடன்களை வாங்குவுள்ளதாக அறிவித்துள்ளது.
பேடிஎம் இந்த சேவையை இந்த நிதி ஆண்டிற்குள் ஒரு மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு வழங்க திட்டமிட்டு இருந்தது. தற்போது 400க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு கடன் அளித்துள்ளது. இந்த கடன் சேவையை, வழங்கி வரும் பல்வேறு வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிறுவனத்துடன் சேர்ந்து 2 நிமிடத்திற்குள் கடன் பெற உதவுகிறது.
பேடிஎம்மில் பெறும் இந்த கடனுக்கு 18 – 36 மாதங்களில் திருப்ப செலுத்தும் அவகாசம் கிடைக்கும். இதனடிப்படையில் உங்களது இஎம்ஐ விகிதமும் இருக்கும். இனி நீங்கள் தனிநபர் கடன் பெற விரும்பினால் வங்கிக்கு செல்ல தேவையில்லை. வீட்டிலிருந்தபடியே பேடிஎம் மூலம் இந்த கடனுக்கு அப்ளை செய்து கடன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் பேடிஎம் செயலியில் நிதி சேவைகள் பிரிவுக்குச் சென்று பின்னர் தனிநபர் கடன்கள் பகுதியை கிளிக் செய்து எளிதாக கடன் பெறமுடியும்