Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மகிழ்ச்சியாக ஆற்றில் குளியல்…. அதிகமான தண்ணீர் வரத்து…. கதறிய குடும்பத்தினர்… நேர்ந்த சோகம்…!!

குடும்பத்துடன் ஆற்றிற்கு குளிக்க சென்ற பெண் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

 

தென்காசி கடையம் பகுதியில் உள்ள நாடான் ஊர் குமரன் குடியிருப்பை சேர்ந்தவர் ராமசாமி. கூலித் தொழிலாளியான இவருடைய மனைவியின் பெயர் மாரிச்செல்வம். இவர்களுக்கு அபிநயா, சுடலை வள்ளி, சுப்பிரமணியன் என 2 மகள்களும் ஒரு மகனும் இருந்தனர்  .இரு மாதங்களுக்கு முன்பு அபிநயாவின் அக்காள் சுடலை வள்ளிக்கும் கடங்கநேரிபகுதியில் வசிக்கும் சதீஷ்க்கும் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் அபிநயா சுடலைவள்ளி அவருடைய கணவர் உள்பட ஐவர் பாப்பான்குளம் ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளனர். ஆற்றில் தண்ணீரின் வரத்து அதிகமாக இருந்துள்ளதனால் அபிநயா சுடலைவள்ளி உட்பட மூவர் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டனர் இதனால் பதறிப்போன உறவினர்கள் அவர்களை காப்பாற்ற முயற்சி செய்தனர் இதில் சுடலைவள்ளி மற்றும் ஒரு பெண் மீட்கப்பட்டனர்.

அபிநயாவை காப்பாற்ற முடியாத காரணத்தினால் பரிதாபமாக ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார் பின்பு அவருடைய சடலம் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த ஆழ்வார்குறிச்சி போலீசார் அபிநயாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |