தேசிய குடும்ப சுகாதார அமைப்பு நாட்டில் உள்ள பிறப்பு இறப்பு விகிதங்களை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.
நாட்டில் இருக்கும் அனைத்து மக்களின் பிறப்பு மற்றும் இறப்புகளை பதிவு செய்ய வேண்டும் என்று 1961ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு அமைப்பு நாட்டில் உள்ள பிறப்பு இறப்பு விகிதத்தை ஆய்வு செய்தது. இந்த ஆய்வு கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று தற்போது அதன் விவரங்களை வெளியிட்டுள்ளது.
அதில் கோவா மாநிலம் 100% பிறப்பு இறப்புகளை பதிவு செய்துள்ளது. கேரளாவில் 99 சதவீத பிறப்பும்,97.4 சதவீத இறப்பும், குஜராத்தில் 97.5 சதவீத பிறப்பும் 93 சதவீத இறப்பும், மகாராஷ்டிராவில் 96.3 சதவீத பிறப்பும் 89.7 சதவீத இறப்பும்,ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் 90% பிறப்பும் 80 சதவீத இறப்பும் பதிவு செய்துள்ளனர்.
இதில் மிகவும் குறைந்த பட்சமாக பீகாரில் 75.6 சதவீத பிறப்பு 37.5 சதவீதம் இறப்பு மட்டுமே பதிவாகியுள்ளது. எனவே இப்படி பிறப்பு இறப்பு பதிவு செய்யும் விகிதத்தில் பல்வேறான மாறுபாடுகள் இருப்பதால் குடும்ப சுகாதார கணக்கெடுப்பு அமைப்பு அதனை சரிசெய்வது குறித்து ஆய்வு செய்து வருகிறது.