Categories
தேசிய செய்திகள்

கொஞ்ச நாளைக்கு இதையெல்லாம் சாப்பிடாதீங்க… வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

ஆப்பாயிலை கொஞ்ச நாட்கள் சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் மக்கள் கொரோனாவில் இருந்து மீண்டு வருவதற்குள் அடுத்ததாக உருமாறிய கொரோனா பரவி மக்களை தாக்கி வருகிறது. இதனால் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நம்முடைய அண்டை மாநிலமான கேரளாவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த பறவைகாய்ச்சல் தற்போது, இந்தியாவின் வட மாநிலங்களான ராஜஸ்தான், பஞ்சாபில் வேகமாக பரவி வருகின்றது. கேரளாவில் பரவி வந்த நிலையில் தற்போது இங்கு இந்தியாவிலும் பரவி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பறவைகாய்ச்சலானது மனிதர்களுக்கும் பரவலாம் என்பதால் ராஜஸ்தான் மாநிலத்தில் ஏராளமான கோழிகள் மற்றும் வாத்துகள் கொல்லப்பட்டுள்ளன. இந்த நோய் மனிதர்களை நேரடியாகத் தாக்குவது இல்லை என்றாலும் நோயினால் பாதிக்கப்பட்ட பறவைகளின் முட்டைகள், இறைச்சிகள் ஆகியவற்றை நாம் அரைவேக்காட்டு உண்ணும்போது மனிதர்களுக்கும் இந்த நோய் பரவும். எனவே அரை வேக்காட்டில் சமைத்த கோழிக்கறி, ஆப்பாயிலில் நோய்க்கிருமிகள் முழுமையாக அழியாமல் அப்படியே இருக்கும். எனவே இவற்றை உண்பதை சிறிது காலம் தவிர்க்குமாறு கூறப்படுகிறது.

Categories

Tech |