ஆன்லைன் கிளாஸ்க்காக ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த குழந்தைகளை பெற்றோர் கவனமுடன் கண்காணிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அரசு பல்வேறு சட்டங்களை விதித்த போதிலும் அதற்கு எதுவும் அஞ்சாமல், சிலர் தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு அச்சப்படுகிறார்கள். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது.
இந்நிலையில் கோவையில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுமி ஒருவரை காதலித்து வந்துள்ளார். தனது காதலன் ஏழுமலையை சந்திக்கச் சென்றபோது கால் டாக்சி ஓட்டுநர் சண்முகவேலின் உதவியை நாடியுள்ளார். அப்போது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சண்முகவேல் அவரை காதலனிடம் ஒப்படைத்தார். அதன் பிறகு காதலன் ஏழுமலையும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், ஆன்லைன் கிளாஷ்க்காக மொபைல் பயன்படுத்திய போது, பேஸ்புக் மூலம் ஏழுமலை சிறுமிக்கு அறிமுகமான தாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஆன்லைன் கிளாஸ்க்காக ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவோர் குழந்தைகளை பெற்றோர் கவனமுடன் கண்காணிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.