நபர் ஒருவர் தன் 6 பிள்ளைகளும் மருத்துவத்துறைக்கு அர்பணித்துள்ள நிலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
இந்தியாவை சேர்ந்த Ashan-ul-haq Choudry (81). இவர் கடந்த 1950 களில் இந்தியா-பாகிஸ்தான் வன்முறையில் தப்பி தன் 19 வயதில் பிரிட்டனுக்கு வந்துள்ளார். தற்போது அவரின் மகள் பணிபுரியும் மருத்துவமனை ஒன்றில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இதனால் அவருக்கு இரங்கல் செய்திகள் குவிந்த வண்ணம் உள்ளது. அதற்கு காரணம் என்னவென்றால் தனக்கு வாழ்வளித்த பிரிட்டனுக்காக Choudry தன் 6 பிள்ளைகளையும் மருத்துவ சேவைக்கு அர்ப்பணித்துள்ளார் என்பதுதான்.
மேலும் இவரின் பிள்ளைகளில் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவராகவும், 2 பேர் பொது மருத்துவர்களாகவும், ஒருவர் ஜூனியர் மருத்துவராகவும் மற்றும் ஒருவர் குழந்தைகளை நல மருத்துவராகவும், இன்னொருவர் மருந்து ஆளுநராகவும் பணியாற்றுகின்றனர். மேலும் இவர்கள் தங்கள் தந்தையுடன் செலவிடும் நேரங்களையும் தியாகம் செய்து மருத்துவப் பணியில் முழுமையாக களமிறங்கி கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
ஆனால் அரசின் விதிமுறைகளை சரியாக பின்பற்றிய Choudryக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எனினும் அவர் கிழக்கு லண்டனில் பாதுகாப்பான முறையில் தனிமையில்தான் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி தன் மகள் பணிபுரியும் கிழக்கு லண்டனில் இருக்கும் மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளார். மேலும் Choudry கணித மற்றும் கணினி அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.