நாமக்கலில் தாயிடம் பொங்கல் பரிசு கேட்டு சண்டையிட்ட மகனை தாயும் அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், நல்லூர் வால்நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த ராணி என்பவரின் மகன் தங்கராசு. திருமணமாகி மனைவியை பிரிந்த நிலையில் தனியாக வசித்து வருகிறார். இவர் மது போதையில் அடிக்கடி தாயிடம் வந்து சண்டையிட்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் 11 மணி அளவில் மது அருந்திவிட்டு தங்கராசு ராணியிடம் பொங்கல் பரிசு கேட்டு தகராறு செய்துள்ளார். அதை ராணி கொடுக்க மறுக்கவே அவரது கள்ளக்காதல் சுப்பிரமணியம் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று காலை தங்கராசு அவரது வீட்டின் ஒருபுறத்தில் தூங்கி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ராணியையும், அவரது கள்ளக்காதலன் சுப்ரமணியம் ஆகியோர் சேர்ந்து அவரை கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் இதுவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.