பிக் பாஸ் ரியோவை கோமாளி என கமெண்ட் செய்தவர்களுக்கு அவரது மனைவி ஸ்ருதி ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது . இந்த வாரம் நடைபெற்று வரும் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் வெற்றி பெறுபவர் நேரடியாக இறுதி வாரத்திற்கு தகுதி பெறுவர் . இதில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் ரியோ அதிக மதிப்பெண்ணில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ரியோவை கோமாளி என விமர்சித்த ரசிகருக்கு ரியோவின் மனைவி ஸ்ருதி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘ரியோவை கோமாளி என கமெண்ட் செய்துள்ளதை பார்த்தேன் . அதில் எனக்கு மிகுந்த சந்தோசம் .
https://twitter.com/sruthi137/status/1346354872384331777
தன் கவலைகளை மறந்து மற்றவர்களை சிரிக்க வைப்பதற்காக போராடும் ஒரு நபரை நான் நேசிக்கிறேன் என்பதில் எனக்கு பெருமைதான். ஒருவரை சிரிக்க வைப்பது அவ்வளவு எளிதல்ல . ஒரு சிறந்த பொழுதுபோக்கு கலைஞருக்கு கிடைக்கக்கூடிய மிகப் பெரிய பட்டம் தான் கோமாளி . எனவே நீ கோமாளியாகவே இரு .மற்றவர்களுக்கு ஒரு ஊன்றுகோலாக நீ இரு . ரியோவை கோமாளி என அழைக்கும் அனைவரும் அவரது நகைச்சுவை உணர்வை தான் பாராட்டுகிறார்கள் . எனவே நீங்கள் சொல்லும் கருத்துக்களை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்’ என பதிலடி கொடுத்துள்ளார் .