Categories
உலக செய்திகள்

வரலாறு காணாத பனிப்பொழிவால்… தத்தளித்து வரும்… ஸ்பெயின் மக்கள்…!!

ஸ்பெயினில் வரலாறு காணாத வகையில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 

ஸ்பெயினில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு கடுமையாக ஏற்பட்டுள்ளது. மேலும் குளிர்ந்த காற்றும் பலமாக வீசி வருகிறது. இதனால் வடகிழக்கு ஸ்பெயினின் லீடாவில் இருக்கும் எஸ்தானி- ஜெண்டாவில் வெப்பநிலை வரலாறு காணாத அளவில் மைனஸ் 32 டிகிரி செல்சியஸ் ஆக குறைந்துள்ளது. மேலும் இது கடந்த 1956 ஆம் வருடத்தில் பதிவாகியிருந்த மிகக் குறைந்த வெப்ப நிலையைவிட 2 டிகிரி குறைவு என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் இனி வரப்போகும் நாட்களிலும் மத்திய மற்றும் வடக்கு ஸ்பெயினில் பனிப்பொழிவு கடுமையாக இருக்கும். மேலும் வெப்பநிலையும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக State Metarological Ajency தெரிவித்துள்ளது. இந்நிலையில் வடக்கு ஸ்பெயினில் இருக்கும் லூகா என்ற மாகாணத்தில் 75 வயதான முதியவர் தன் கார் பனிப்புயலில் சிக்கிக் கொண்டதால் அந்த கடும் குளிரிலும் அதனை இறங்கி எடுக்க முயற்சி செய்துள்ளார். இதனைக்கண்ட காவல்துறையினர் உடனடியாக சென்று அவரை மீட்டுள்ளனர்.

Categories

Tech |