விஜய் மியூசிக்கில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அன்சீன் எபிசோடின் புரோமோ வெளியாகியுள்ளது .
இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை ஏழு சுற்றுக்கள் நிறைவடைந்துள்ளது . தற்போது நடைபெற்று வரும் சுற்றில் கொடுக்கப்பட்ட வாக்கியத்திற்கு எந்த நபர் பொருந்துவார் என ஒவ்வொருவரும் கூற வேண்டும் . இந்நிலையில் விஜய் மியூசிக்கில் ஒளிபரப்பாகி வரும் அன்சீன் எபிசோடின் புரோமோ வெளியாகியுள்ளது . அதில் கேபிக்கு ‘கூடிப் பிரியேல்’ என்ற வாக்கியம் கிடைத்துள்ளது .
#BiggBossUNSEEN – இன்று இரவு 10:30 மணிக்கு நம்ம #VijayMusic ல.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #பிக்பாஸ் pic.twitter.com/gpSRhgSjYx
— Vijay Takkar (@vijaytakkaroffl) January 7, 2021
இதையடுத்து கேபி ‘பாலா மற்றும் ஷிவானி இருவரிடமும் நான் குளோஸ் ஆக ட்ரை பண்ணினேன் . ஒரே நேரத்தில் இருவரிடமும் தனித்தனியாக நெருக்கமாக இருந்தேன் . ஆனால் அவங்க இரண்டு பேரும் குளோஸ் ஆன பிறகு நான் தனியாக இருப்பது போல் உணர்ந்தேன் . தினமும் இரவு பாலாவிடம் உனக்கு என்ன பிரச்சனை ?எனக் கேட்பேன் ஆனால் பாலா அதற்கு பதிலளித்தில்லை .சிவானி இடமும் கேட்டிருக்கிறேன் .அவளும் பதில் அளித்ததில்லை . சரி ஓகேன்னு விட்டுட்டேன் ‘ என கியூட்டாக பேசுகிறார்.