கரூரில் ஆவணக்கொலை செய்யப்பட்டுள்ள வாலிபரின் காதலியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஹரிஹரன். இவர் கடை ஒன்று நடத்தி வருகிறார். இந்நிலையில் ஹரிஹரன் கடை தைத்திருக்கு பகுதியை சேர்ந்த வேறு சாதி பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு காதலர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இளைஞர் ஹரிஹரன் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் இளைஞரை கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக காதலியின் தந்தை வேலணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் காதலியையும் கைது செய்யக் கோரி ஹரிஹரனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து ஹரிஹரனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.