சசிகலா பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து ஜனவரி 27ஆம் தேதி உறுதியாக விடுதலையாவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரான சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார். தற்போது சசிகலாவின் நான்காம் ஆண்டு சிறைவாசம் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் சசிகலா எப்போது விடுதலை ஆவார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இந்நிலையில் ஜனவரி 27 ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து சசிகலா விடுதலை ஆகிறார் என்று அவருடைய வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார். வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய காலஅவகாசம் வழங்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார். இதை ஏற்று விசாரணையை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது