கோவில் ஊழியர்களுக்கு பொங்கல் போனஸாக ரூ.1000 வழங்குவதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூபாய் 2500 வழங்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து பொங்கல் பரிசு தற்போது வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கோயில் ஊழியர்கள் அனைவருக்கும் ரூபாய் 1000 பொங்கல் போனஸ் வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது.
அதன்படி 2019 – 20 வருடதங்களில் 240 நாட்கள் பணியாற்றிய முழு நேரம், பகுதி நேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள் அனைவருக்கும் ரூபாய் 1000 போனஸ் வழங்கப்படும். மேலும் 240 நாட்களுக்குள் பணியாற்றியவர்களுக்கு பணிபுரிந்த நாட்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் போனஸ் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.