Categories
லைப் ஸ்டைல்

உஷார்! பீதியை கிளப்பும் பறவைக்காய்ச்சல்….. இந்த அறிகுறிகள் இருந்தா…. எச்சரிக்கையா இருங்கள்…!!

பறவைக்காய்ச்சல் குறித்த அறிகுறிகள் எப்படி இருக்கும் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பறவைக் காய்ச்சல் என்பது மருத்துவத்துறையில் ஏவியன் இன்ஃப்ளூயன்சா என்று குறிப்பிடப்படுகிறது. இந்த பறவைக் காய்ச்சல் பறவைகளில் ஏற்படும் ஒரு வைரஸ் தொற்று. இது மனிதர்களுக்கு அரிதாக உண்டாகும் தொற்று என்றாலும் மனிதர்களையும் விலங்குகளையும் பாதிக்ககூடியது என்பதால் கவனமாக இருக்க வேண்டும். ஏற்கனவே கொரோனா என்னும் பெருந்தொற்று உலகம் முழுக்க கோரத்தாண்டவமாடி வருகின்றது. இந்நிலையில் புதிய பிரச்சனையாக பறவைகாய்ச்சல் இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளது. வடமாநிலங்களான ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாச்சல் மற்றும் கேரளாவில் உருவெடுத்திருக்கும் இந்த பறவைக் காய்ச்சல் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

பறவைக்காய்ச்சல்:

உலக சுகாதார நிறுவனம் 1997 ஆம் ஆண்டு மனிதர்களுக்கு இந்த H5 N1 இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பறவைகாய்ச்சலின் பொதுவான வடிவமான இது பறவைகளுக்கு ஆபத்தானது மட்டுமல்லாமல் மனிதர்களையும் தாக்கும் அபாயம் உள்ளது.

அறிகுறிகள்:

1.பறவைக்காய்ச்சல் தொற்று இருந்தால் காய்ச்சல் 38டிகிரி செல்சியஸ் இருக்கும்.

2.தொடர் இருமல் இருக்கும்.

3.வயிற்றுப்போக்கு உண்டாகும்.

4.சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம்.

5.தலைவலி, தசைவலிகள், உடல் நலக்குறைவு, சோர்வு மற்றும் சளி ஒழுகுவது,

6.தொண்டையில் வலி மற்றும் தொண்டைப்புண்.

7.குளிர் மற்றும் வியர்வை, போன்றவை உண்டாகும்.

8.அரிதாக குமட்டல் மற்றும் வாந்தி போன்றவையும் ஏற்பட கூடும்.

9.இந்த அறிகுறிகள் இல்லாமல் ஒரு கண்ணில் மட்டும் தொற்று உண்டாகவும் வாய்ப்புண்டு.

10பெரும்பாலும் மூச்சு விடுதல் சுவாச அறிகுறிகளோடு தான் உண்டாகும்.

பறவைக்காய்ச்சல் தொற்று பரவியிருக்கிறது என்பதால் மக்கள் அனைவரும் அச்சப்பட வேண்டியதில்லை. ஆனால் கோழிப்பண்ணை வைத்திருப்பவர்கள், இறைச்சி கடை வைத்திருப்பவர்கள். பறவைகளோடு தொடர்பில் இருப்பவர்கள் காய்ச்சலுடன் இது போன்ற அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவமனையை அணுகுங்கள்.

Categories

Tech |