தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம் நெல்வாய் கிராமத்தில் கதிரவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தீராத வயிற்று வலியால் சில மாதங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் திருக்கச்சூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்த கதிரவன் அங்கு தனது பிரச்சனையை கூறினார். அதன் பின் யாரும் எதிர்பாராத சமயத்தில் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் கதிரவனை உடனடியாக மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.