Categories
பல்சுவை

பேடிஎம் இருக்கா?… இனி 2 நிமிடங்களில் கடன் கிடைக்கும்…!!!

டிஜிட்டல் நிதி சேவை தளமான பேடிஎம் சொத்து அடமானம் இல்லாமல் இரண்டு நிமிடத்தில் கடன் பெறும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

உங்களுக்கு ஏதாவது நிதி நெருக்கடி உள்ளதா? வியாபாரத்தில் பிரச்சனையா? உங்களுக்கு ஒரு குட் நியூஸ். டிஜிட்டல் நிதி சேவை தளமான பேடிஎம் எந்த ஒரு சொத்து அடமானம் இல்லாமல் 2 லட்சம் ரூபாய் வரை எம்எஸ்எம்இ வியாபாரிகள் மற்றும் சம்பளதாரர்களுக்கு கடன்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த நிதியாண்டில் ஒரு மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை மூலமாக நிதி வழங்க திட்டமிட்டுள்ளது. தற்போது வரை 400க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கடன் பெற்றுள்ளனர்.

இந்த கடன் சேவையை வழங்கிக் கொண்டிருக்கும் பேடிஎம், பல்வேறு வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிறுவனங்களுடன் இணைந்து இரண்டு நிமிடங்களுக்குள் கடன் பெற உதவுகிறது. அவ்வாறு பெரும் கடனுக்கு 18 முதல் 36 மாதங்களில் திரும்ப செலுத்தும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி உங்களது இஎம்ஐ விதமும் இருக்கும். இந்த சேவையை சம்பள கணக்கு வைத்திருப்பவர்கள் மற்றும் சிறு வணிக உரிமையாளர்கள், தொழில் வல்லுனர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த அதிரடி சேவை பெரிய வங்கிகளிடமிருந்து கடன் எடுக்க முடியாத பயனர்களுக்கு மிக பயனுள்ளதாக அமையும். எனவே நீங்கள் இனிமேல் தனிநபர் கடன் பெற வேண்டும் என்றால், வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே பேடிஎம் மூலமாக கடனுக்கு அப்ளை செய்யலாம். அவ்வாறு கடன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் பேடிஎம் செயலியில் நிதி சேவைகள் பிரிவுக்கு சென்ற பின்னர் தனிநபர் கடன்கள் பகுதியை கிளிக் செய்து எளிதாக கடன் பெற முடியும்.

Categories

Tech |