Categories
தேசிய செய்திகள்

“யாருக்கும் துரோகம் கூடாது” 2 பெண்களை ஒரே மேடையில்…. திருமணம் செய்த இளைஞர்…. ஆச்சர்ய சம்பவம்…!!

இளைஞர் ஒருவர் ஒரே நாளில் இரண்டு காதலிகளையும் திருமணம் செய்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சந்து மவுரியா. இவர் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் மற்றொரு பெண்ணையும் பிடித்து போனதால் அந்த பெண்ணையும் காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இருவரையும் காதலித்து வந்த சந்து யாரை திருமணம் செய்து கொள்வார் என்ற விவாதமும், சர்ச்சையும் வருடி ஊரில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் தன்னுடைய இரண்டு காதலியையும் திருமணம் செய்ய விரும்பியுள்ளார். இதற்கு சந்து இரண்டு காதலிகளின் பெற்றோரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதையடுத்து இரண்டு குடும்பங்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

எனவே சந்து ஒரே மேடையில் ஒரே நாளில் இரண்டு காதலியையும் திருமணம் செய்துள்ளார். இதில், 500க்கும் மேற்பட்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தி உள்ளனர். தனது திருமணம் குறித்து சந்து கூறுகையில், “நான் இருவரையும் காதலித்தேன். இருவரையும் திருமணம் செய்ய விரும்பினேன். அவர்கள் இருவரும் என்னை விரும்பினார்கள். நான் யாருக்கும் துரோகம் செய்யக் கூடாது என நினைத்தேன். எனவே இருவரையும் ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்டேன்” என்று விளக்கம் கொடுத்துள்ளார். இதையடுத்து ஒரே நாளில் இரண்டு காதலிகளோடு திருமணம் செய்த சிந்துவை அந்த ஊர்  வாலிபர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

Categories

Tech |