Categories
Uncategorized

பிரபல தமிழ் நடிகை திடீர் திருமணம்… பரபரப்பு செய்தி…!!!

தமிழில் கயல் திரைப்படம் மூலமாக மிகவும் பிரபலமான நடிகை ஆனந்திக்கு நேற்று மிக எளிமையாக திருமணம் நடந்துமுடிந்தது.

தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் என்ற திரைப்படம் மூலமாக ஆனந்தி நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பிரபுசாலமன் இயக்கத்தில் உருவான கயல் படம் மூலமாக மிகவும் பிரபலம் அடைந்தார். அதன் பிறகு அவர் கயல் ஆனந்தி என்று அழைக்கப்பட்டார். அவர் தற்போது டைட்டானிக் காதலும் கடந்து போகும், ஏஞ்சல், அலாவுதீனின் அற்புத கேமரா, ராவண கூட்டம், கமலி ஃப்ரம் நடுக்காவேரி, தெலுங்கில் ஜாம்பிய ரெட்டி போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

இந்நிலையில் நடிகை ஆனந்திக்கும் தெலுங்கானாவில் சேர்ந்த தொழிலதிபர் சாக்ரடீஸ் என்பவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டு உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதனையடுத்து அவருக்கு மிக எளிமையாக திருமணம் நடந்துமுடிந்தது. அதில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்ததால் அவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். தற்போது தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, ஜே எஸ் கே சதீஷ், இயக்குனர் நவீன் ஆகியோர் கலந்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |