Categories
லைப் ஸ்டைல்

முட்டைகோஸ் இப்படி சாப்பிட்டால் ஆபத்து…. இப்படி சாப்பிட்டால் நிறைய நன்மைகள்…. வாங்க பார்க்கலாம்…!!

முட்டைகோஸ் எப்படி சாப்பிட்டால் ஆபத்து, எப்படி சாப்பிட்டால் நல்லது என்று இங்கே பார்க்கலாம்.

பச்சை இலைக் காய்கறிகளில் பட்டியலில் முட்டைக்கோஸ் மற்றும் காலிபிளவர் அடங்கும். சிலர் இந்த காய்கறிகளை விரும்பி சாப்பிடுவர். சிலருக்கு இந்த காய்கறிகள் பிடிக்காது. இதில்  மறைந்து இருக்கும் நாடாப்புழுக்கள் நம் கண்ணுக்கு தெரிவதில்லை. முட்டைகோஸ் மற்றும் காலிஃப்ளவரில் நாடாப்புழுக்கள் மறைந்திருக்கும். எனவே அவற்றை கழுவாமல் அப்படியே சமைத்தால் ஒட்டுண்ணிகள் உடலுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. உடலுக்குள் செல்லும்போது நாடாப்புழுக்கள் குடலை அடைந்து உடலில் ஊடுருவி ரத்த நாளங்களுக்குள் செல்கின்றன.

பிறகு அந்த ரத்தத்தின் மூலம் உடலின் மற்ற பகுதிகளுக்கும் செல்கிறது. இதுபோன்ற சூழலில் ஆபத்தை குறைக்கும் ஒரே வழி என்னவென்றால், நாம் முட்டைக்கோசை சமைப்பதற்கு முன்பாக நன்கு கழுவி சமைக்கவேண்டும். மழைக்காலங்களில் நாடாப்புழுக்கள் மிகவும் சுறுசுறுப்பாக நம் உடலில் நன்கு வளர்ச்சி பெறும். எனவே நாம் முட்டைகோஸ் மற்றும் காலிபிளவர் சமைப்பதில் கவனமாக இருக்க வேண்டும். அப்படி சாப்பிடும் போது நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.

நன்மைகள்:

கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் சுத்தப்படுத்துகிறது.

வயிற்றுப்புண், அழற்சியை குணப்படுத்தும்.

எடை குறைத்தல் என பல்வேறு நன்மைகளை செய்யும் சத்துக்கள் நிறைந்த முட்டைகோஸ் சமைத்து சாப்பிடுவதை விட ஜூஸாக சாப்பிடுவது சிறந்தது.

முட்டைகோஸ் இலைகளை போட்டு நன்கு கொதிக்க வைத்து மென்மையாக மாறிய பின் ஜூஸாக அரைத்து அருந்தலாம். இந்த சாறுடன் ஆப்பிள், வெள்ளரி போன்ற பலன்கள் சேர்த்து சாப்பிட்டால் ரொம்ப நல்லது.

Categories

Tech |