மின்சாரம் தாக்கியதில் ஹோட்டல் ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள சஞ்சீவிராயன் கோவில் தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்துவருகிறார். இவர் வண்ணார்பேட்டையில் உள்ள ராமானுஜம் தெருவில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்த ஹோட்டலில் வண்ணார்பேட்டை ஸ்ரீனிவாசன் தெருவில் வசித்து வரும் வெங்கடேசன் என்பவர் பணிபுரிகிறார். இந்நிலையில் ஹோட்டலுக்கு வெளியே இருந்த பாத்திரங்களை வெங்கடேசன் உள்ளே கொண்டு வந்து வைக்கும் போது, திடீரென கால் தவறி கீழே விழுந்தார்.
அப்போது தன்னை அறியாமல் அங்கிருந்த மின்சார ஸ்விட்ச் போர்டை தனது கையால் பிடித்ததால் அவரை மின்சாரம் தாக்கியது. அங்கு மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தண்டையார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து ஹோட்டல் உரிமையாளர் ராஜேந்திரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.