பிரபல இயக்குனரை நடிகர் தனுஷ் அதலபாதாளத்திற்கு தள்ளியுள்ளார்.
ஆரம்ப காலம் முதல் இன்று வரை சினிமாவில் தனது ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பை மெருகேற்றி கொண்டு இருக்கும் நடிகர் என்றால் அது தனுஷ் தான். ஆனால் வசூல் ரீதியாக அவர் பெரிதளவில் படத்தை கொடுத்ததில்லை. அவர் நன்றாக நடித்த படங்கள் கூட வசூல் ரீதியாக தோல்வி அடைந்துள்ளது. உதாரணத்திற்கு மயக்கம் என்ன திரைப்படம். தனுஷ் வசூல் ரீதியாக வெற்றி கொடுத்த படங்கள் என்றால் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் மட்டுமே. பிற படங்கள் பெரிய அளவில் ஓடவில்லை.
இதில் பிரபல இயக்குனரை அதல பாதாளத்தில் தனுஷ் தள்ளியிருக்கிறார். மைனா, கும்கி, கயல் போன்ற படங்களை இயக்கி காதலர்களின் மனதை கவர்ந்த இயக்குனர் பிரபு சாலமன். அவர் தனுஷை வைத்து தொடரி என்ற படம் இயக்கினார். அதன் பின்பு அவரின் சினிமா பயணம் தொடர வில்லை. தற்போது நீண்ட இடைவெளிக்குப்பிறகு கும்கி படத்தை இயக்கி வருகிறார். அந்த படம் வெற்றி பெற்றால் மட்டுமே சினிமா பயணம் அவருக்கு தொடரும்.