உடலுக்கு நன்மை தரும் சிறுதானிய உணவுகளை நம் உணவில் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் சாப்பிடும் உணவுகளை நமது உடலுக்கு நல்லது தரக்கூடியதாக இருக்க வேண்டும். நம் முன்னோர்களின் காலத்தில் சிறுதானிய உணவுகள் அவர்களுக்கு மிகுந்த உடல் ஆரோக்கியத்தை கொடுத்தன. அதனால் பெரும்பாலும் நம் முன்னோர்கள் சாப்பிட்ட உணவுகளில் சிறுதானிய உணவுகளை உள்ளன. அவ்வாறு உடலுக்கு நன்மை தரக்கூடிய உணவுகளில் சிறுதானிய உணவுகள் மிகவும் சிறந்தது. எலும்பு தொடர்பான பிரச்சனைகளை தடுக்க உணவில் சிறு தானியங்களை சேர்ப்பது ஒரு நல்ல தீர்வு.
உதாரணமாக மூட்டு வலி மற்றும் வீக்கத்தை குறைக்க கேழ்வரகு மற்றும் கம்பு உதவுகிறது. அலர்ஜியை நீக்கி எலும்புகளை உறுதியாக்கிறது. இவற்றை ரொட்டி, கஞ்சி, கிச்சடி மற்றும் சாலட் என ஏதேனும் ஒருவிதத்தில் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். கடின உழைப்பு செல்வோருக்கு ஏற்ற உணவாக இது உள்ளது. அதனால் இனிமேல் தங்கள் உணவு களில் சிறுதானிய உணவுகளை சேர்த்துக் கொண்டால் உங்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.