Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கிரண் பேடிக்கு எதிராக முதலமைச்சர் போராட்டம்… புதுச்சேரியில் பரபரப்பு…!!!

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெற வேண்டும் என்று முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த போராட்டத்தின் மூலம் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெற வலியுறுத்தி எதிர்ப்புகளை தெரிவித்தனர். இப்போராட்டத்திற்கு முதலமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், உறுப்பினர்கள், தொண்டர்கள் என காங்கிரஸ் கட்சியில் உள்ள ஏராளமானோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இப்போராட்டம் 11ஆம் தேதி வரை தொடர்ந்து நான்கு நாட்களுக்கு நடைபெற உள்ளது. போராட்டத்திற்கு  தலைமை தாங்கிய முதல் அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது, டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் எப்படி அமைதியான முறையில் போராட்டம் செய்கிறார்களோ அதே போன்று நாங்களும் கிரண்பேடியை திரும்பப் பெற வேண்டும் என்று அமைதியான முறையில் எங்களது எதிர்ப்பை காட்டுவோம் என்றார்.

அதன்பின் டெல்லியில் உயிரிழந்த விவசாயிகளுக்காக அனைவரும் மௌன அஞ்சலி செலுத்தினர். இந்த போராட்டத்தால் புதுச்சேரி ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை வளாகம், அண்ணா சதுக்கம் போன்ற பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு படையினர் இதனை கண்காணித்து வருகின்றனர்.

Categories

Tech |