Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பொங்கலுக்கு பிறகு பள்ளிகள்…. இரண்டாவது நாளாக கருத்து கேட்பு…. மாணவர்களை கலங்கடித்த பெற்றோர்….!!

பொங்கலுக்குப் பின் பள்ளிகள் திறப்பது குறித்து இரண்டாம் நாளாக பெற்றோர்கள் கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற்றது.

 

தமிழகத்தில் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவியருக்கு பள்ளிகள் திறப்பது பற்றி முதலமைச்சர் அறிவிப்பார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து பள்ளி கல்வி துறை சார்பில் கடந்த இரு நாட்களாக அனைத்து பள்ளிகளிலும் கருத்து கேட்பு கூட்டம் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும் இதனை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு தொகுத்து அனுப்பி வைக்க வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டது. இதனால் விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த 190 அரசு பள்ளி கூடங்கள் 86 மெட்ரிக் பள்ளி கூடங்கள் 90 அரசு உதவி பெறும் பள்ளி கூடங்கள் 39 சிபிஎஸ்இ பள்ளி கூடங்கள் என மொத்தம் 410 பள்ளிகளில் கடந்த இரு நாட்களாக கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது .

 

சில பள்ளிகளில் பெற்றோர் கருத்து கூறுவதை வீடியோவாக பதிவு செய்தனர். பெற்றோர் தெரிவித்த கருத்துக்களில் பெரும்பாலான கருத்துக்கள் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொங்கல் விடுமுறையை அடுத்து பள்ளிகளை திறக்க வேண்டும் என்றும், பள்ளி மாணவர்களுக்கு நோய் நோயின் பாதிப்பு ஏற்படாமல் இருக்க உரிய விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து பள்ளிகளை திறக்கலாம் எனவும் தெரிவித்ததாக கூறப்பட்டிருக்கிறது.

கிராமப்புறம் உள்ள மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளிகள் திறப்பதால் நோய் பாதிப்பு கடுமையாகும் என கருத்துக்கள் தெரிவித்தனர். அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர்கள் தெரிவித்த கருத்துக்களை தலைமை ஆசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு அவருடைய அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும், இதனை ஆய்வு செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், பள்ளி கல்வித்துறை இயக்குனருக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Categories

Tech |