Categories
மாநில செய்திகள்

பொள்ளாச்சியில் வரும் 10ம் தேதி… திமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்… ஸ்டாலின் அறிவிப்பு…!!!

பொள்ளாச்சி பாலியல் பயங்கரதிற்கு எதிராக திமுக சார்பாக 10 ஆம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியில் பண்ணை வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இளம் பெண்களை பிடித்து அடைத்து வைத்து, பாலியல் துன்புறுத்தி வீடியோ எடுத்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தக் கொடூர வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரி, சதீஷ்குமார், வசந்தகுமார் மற்றும் மணிகண்டன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தார்கள். அந்த வழக்கு சிபிஐ விசாரணையில் இருக்கிறது. இந்நிலையில் அந்த வழக்கில் கைதாகியுள்ள திருநாவுக்கரசு என்பவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

மேலும் அந்த வழக்கில் தொடர்புடைய ஐந்து பேர்களின் கூட்டாளிகளான பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள அருளானந்தம், பைக் பாபு, கெரோன் பவுல் ஆகிய மூன்று பேரிடம் சிபிஐ போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்கள் 3 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க வேண்டுமென மகளிர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் பலாத்காரத்திற்கு எதிராக வருகின்ற பத்தாம் தேதி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #PollachiSexualAssultCase- ஐஅதிமுகவின் கீழ்மட்ட நிர்வாகி கைதுடன் முடிந்து விடக்கூடாது. இதில் தொடர்பு உள்ள அதிமுக மேல்மட்டத்தில் நிறையும் கைது செய்ய வலியுறுத்தி கனிமொழி தலைமையில் ஜனவரி 10ஆம் தேதி காலை 10 மணிக்கு பொள்ளாச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |