நபர் ஒருவர் நீதிமன்றத்தில் கொரோனா தொற்று என்பது அரசியல்வாதிகளால் செய்யப்பட்டுள்ள சதி என்று வாதிட்டுள்ளார்.
சூரிச்சை சேர்ந்த Naim Rashiti என்ற நபர் நீதிமன்றத்தில் இந்த கொரோனா தொற்று என்பது வியாபாரிகள் அரசியல்வாதிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளால் இணைந்து திட்டமிட்டு செய்யப்பட்டுள்ள சதி என்றும் வாதாடியுள்ளார். மேலும் முகக்கவசம் அணிவதால் சுவாச பற்றாக்குறை ஏற்படும் என்றும் முகக்கவசம் ஒருவர் மேல் ஒருவருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்றார்.
மேலும் அவர்களை நோயாளியாக்கும் என்று நீதிமன்றத்தில் வாதாடியுள்ளார். ஆனால் சூரிச் நீதிமன்றம் இவரின் வாதங்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் 22 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வழங்கியுள்ளது. அதோடு அந்த நபருக்கு 4695 சுவிஸ் பிராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து Rashiti கூறுகையில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த அபராதம் என்னை திக்குமுக்காட செய்துள்ளது. மேலும் இந்த வழக்கை தான் பெடரல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.