Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜூன் 3_இல் திமுக M.L.A மற்றும் M.P_க்கள் கூட்டம்….!!

ஜூன் 3_ஆம் தேதி திமுக M.L.A , M.P மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுமென்று திமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை மற்றும் 22  சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 38 மக்களவை தொகுதிகளில் போட்டியிட்ட இக்கூட்டணி 37 இடங்களிளிலும் , 22 சட்டமன்ற தொகுதிகளில் 13 இடங்களையும் கைப்பற்றியது. இதில் வெற்றி பெற்ற திமுக சட்டமன்ற வேட்பாளர்கள் மூன்று தினங்களுக்கு முன்பு கட்சியின் தலைவர் முக.ஸ்டாலின் முன்னிலையில் தமிழக சபாநாயகர் முன்பு MLA_க்களாக பதவி பிரமாணம்  கொண்டனர்.

இந்நிலையில் திமுக தலைமை கழகம் சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் வருகின்ற ஜூன் 3_ஆம் தேதி திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் வைத்து திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இனி வரும் நாட்களில் நடைபெற கூடிய சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற கூட்டத்தில் MLA , MP_க்கள் எப்படி செயல்படுவது என விவாதிகப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |