Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பொங்கல் வருதுல்ல….! இடமே இல்லை… செம கூட்டம்… வேற ரயில் விடணும்… வெளியான புது தகவல் …!!

சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய அனைத்து ரயில்களும் நிரம்பி விட்டதால் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது வருகிற 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ரயில்களில் பயணிகள் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களை சேர்ந்த பெரும்பாலானோர் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் வசித்து வருவதால் தற்போது சொந்த ஊருக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாட ரயிலில் முன்பதிவு செய்கின்றனர். இதனையடுத்து கொரோனா தொற்று காரணமாக ரயில்களில் முன்பதிவு செய்து மட்டுமே பயணிக்க முடியும் என்பதால், முன்பதிவு அல்லாத டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படவில்லை.

இந்நிலையில் தென் மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, செங்கோட்டை, மதுரை, ராமேஸ்வரம், திருச்சி போன்ற நகரங்களுக்கு புறப்படும் ரயில்களில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிகள் முழுவதும் நிரம்பி விட்டன. இதனால் 12 மற்றும் 13 ஆம் தேதி பயணம் செய்ய பிற இடங்கள் இல்லை. இதே போல தஞ்சாவூர் மற்றும் திருச்செந்தூர் சொல்லக்கூடிய ரயில்களும் நிரம்பிவிட்டன. இதனைத் தவிர சென்னையில் இருந்து கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு சொல்லக்கூடிய நீலகிரி, ஏற்காடு, சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முதலாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு ஏசி படுக்கைகள் நிரம்பிய நிலையில் ஒரு சில இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன.

மேலும் சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூர், திருவனந்தபுரம், மங்களூர், மைசூர், டெல்லி, மும்பை போன்ற இடங்களுக்கு செல்லும் ரயில்களும் நிரம்பி வருகின்றன, இதனையடுத்து பகல் நேரங்களில் செல்லக்கூடிய மதுரை வைகை, கோவை இன்டர்சிட்டி போன்ற  ரயில்களில் அனைத்து இடங்களும் நிரம்பி விட்ட நிலையில் மதுரை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸில் மட்டும் இடங்கள் காலியாக இருக்கின்றன. பொதுவாக அனைத்து ரயில்களிலும் காத்திருப்போர் பட்டியல் 100 முதல் 200 வரை உள்ளன. இதனால் எந்த ரயில்களில் காத்திருப்போர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்பதைப் பொறுத்தே சிறப்பு ரயில் குறித்து அறிவிக்கப்படும் என ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |