Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

பொங்கல் பரிசு ரூ.2,500…. அதிமுகவுக்கு செக் வைத்த திமுக…. நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு …!!

பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் ரேஷன் கடைகளுக்கு அருகில் அரசியல் கட்சியினர் பேனர் வைக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி சார்பில் மனு தாக்கல் செய்யபட்டது. அந்த மனுவில் பொங்கல் பண்டிகைக்காக தமிழக அரசின் சார்பில் 2500 ரூபாய் ரொக்கம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி வருவதாகவும், இந்த பரிசு பொருட்களை ஆளும் கட்சியினர் வீடு வீடாக சென்று வழங்கி வருவதாகவும் இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசின் சார்பில் டோக்கனுகளுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்படும் என தெரிவித்த உத்தரவாதத்தை ஏற்று வழக்கை முடித்து வைத்தது.

இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகின்ற ரேஷன் கடைகளுக்கு முன்பு ஆளும் கட்சியினர் மற்றும் அரசியல் கட்சியின் பேனர் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தங்களுடைய சுய விளம்பரங்கள் மூலமாக இந்த பேனர்களை வைத்துள்ளதாகவும் இதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரியும் ஆர் எஸ் பாரதி சார்பில் மீண்டும் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஜித் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் இராமமூர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன்,   ஆளுங்கட்சியினர் பல இடங்களில் இந்த விதி மீறலில் ஈடுபட்டு வருவதாகவும் பல்வேறு இடங்களில் ஆளும் கட்சியினர் ரேஷன் கடைகளுக்கு முன்பாக அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்களை வாழ்த்தி இந்த தொகுப்புக்கு நன்றி தெரிவித்து பேனர்  வைக்கப்பட்டுள்ளதாகவுமும் அதற்க்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார் .

இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், பொங்கல் பரிசு வழங்கும் ரேஷன் கடைகளில் அரசியல் கட்சியினரும் பேனர் வைக்க கூடாது எனவும் உத்தரவிட்டனர். மேலும் ரேஷன் கடைகளுக்குள் துண்டு பிரசுரங்களை விநியோகிக்க கூடாது எனவும், பொங்கல் பரிசு தொகுப்பு பைகளில் மறைந்த முதலமைச்சர் மற்றும் முதலமைச்சரின் படங்கள் இடம் பெறலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் பொது இடங்களில் அனுமதி இன்றி வைக்கப்படுகின்ற பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், அனுமதியின்றி பேனர் வைக்க படுவதற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டு இருக்கின்றன.

Categories

Tech |