Categories
உலக செய்திகள்

அமெரிக்க இராணுவத்தின்… முக்கிய பொறுப்பில்… தமிழர் நியமனம்…!!

அமெரிக்க இராணுவத்தில் தலைமை தகவல் அதிகாரியாக தமிழகத்தை சேர்ந்தவர் நியமிக்கப்பட்டுள்ளார். 

அமெரிக்காவின் ராணுவத்தில் கடந்த வருடம் தலைமை தகவல் அதிகாரி என்ற பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜ் ஐயர் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. திருச்சியை சேர்ந்த டாக்டர் ராஜா ஐயர் அங்கிருக்கும் தேசிய தொழில்நுட்ப மையத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். அதன்பின்பு பெங்களூரில் பணியாற்றியுள்ளார். இதனை தொடர்ந்து அவர் மின் பொறியியல் படிப்பில் PHD ஆய்வு நிறைவுசெய்துள்ளார். அதன்பிறகுதான் அமெரிக்காவுக்கு சென்று பணியாற்ற துவங்கியுள்ளார். மேலும் இவர் அமெரிக்காவின் ராணுவ செயலருக்கு ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து தற்போது இவருக்கு கிடைத்துள்ள தலைமை தகவல் அதிகாரி பதவியானது மூன்று நட்சத்திர தளபதி பதவிக்கு சமமானதாகும். மேலும் 15 ஆயிரம் வீரர்கள் உலகமெங்கும் இருக்கும் 100 நாடுகளில் இவருக்கு கீழ் பணியாற்ற உள்ளனர். மேலும் இவர் சுமார் 1, 600 கோடி டாலர் மதிப்புடைய ராணுவ தளவாட கொள்முதலை மேற்பார்வையிடும் பணியில் அமர்த்தப்பட உள்ளார். மேலும் இவர் கடந்த 26 ஆண்டுகளாக அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோடு மட்டுமன்றி இவரின் மனைவி பிருந்தா என்பவரும் தகவல் தொழில்நுட்ப சுகாதார தொழிலில் நிபுணராக அமெரிக்க அரசியலில் பணி புரிந்து வருகிறார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

Categories

Tech |