திருவையாறு அருகில் ஆடு திருடிய 4 பேரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர் .
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு அருகில் பனவெளி மாரியம்மன்கோவில் தெருவை சார்ந்தவர் மணிராசு மகன் மணிகண்டன் (வயது24). இவர் தன்னுடைய வீட்டில் ஆடு வளர்த்து வருகின்றார். சம்பவம் நடந்த அன்று இருசக்கரவாகனத்தில் வந்த சிலர் ஆட்டை திருடி விட்டு தப்பி சென்றுள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் ஆடு திருடியவர்களை விரட்டி சென்றுள்ளனர். இதில் ஒருவர் மட்டும் தப்பிய நிலையில் மற்ற 4 பேரும் பிடிபட்டனர்.
அவர்களிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் பாபநாசம் தாலுகா மணலூரை சேர்ந்த திருநாவுக்கரசு மகன் பூபதி (19), பழனிச்சாமி மகன் ஸ்ரீகாந்த் (22), செந்தில்குமார் மகன் மதுபாலன் (19), அம்மன்பேட்டையை சார்ந்த செல்வராஜ் மகன் காட்டுராஜா (22) ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து நடுக்காவேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூபதி, மதுபாலன், காட்டுராஜா, ஸ்ரீகாந்த் ஆகிய 4 பேரையும் கைது செய்துள்ளனர் . மேலும் தப்பி சென்ற நபரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.