பெண் ஒருவர் தன்னை காண வந்த காதலனை காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனில் உள்ள பிர்மிங்கம் என்ற நகரத்தைச் சேர்ந்த அஜாஸ் ஹுசைன் ஷா மில்லியனரான இவர் தன் 1,65,000 டாலர் மதிப்புடைய தங்க லம்போர்கினி ஹூராக்கன் காரை எடுத்துக்கொண்டு இத்தாலியிலுள்ள தன் காதலியை பார்க்க வந்துள்ளார். ஆனால் ஹுசேன் ஷா வின் காதலி தன் வீட்டு பால்கனியில் அவரின் காரைப் பார்த்ததும் உற்சாகம் அடையவில்லை. எனினும் அதற்கு மாறாக இத்தாலியின் காவல்துறைக்கு அழைப்பு விடுத்து தன்னை காப்பாற்றுமாறு கோரியுள்ளார். இதனைத்தொடர்ந்து ரிமினி என்ற பகுதியில் உள்ள அவரின் வீட்டிற்கு காவல்துறையினர் உடனடியாக சென்று ஹுசைன் ஷாவை கைது செய்துள்ளனர்.
மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தன் காதலியை அச்சுறுத்துவதற்காக தான் கடல் கடந்து ஹுசைன் ஷா கொலைவெறியுடன் வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அதாவது ஹுசைன் ஷாவும் அவரது காதலியும் கடந்த ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். எனினும் இவ்வளவு நாட்களாக ஹுசைன் ஷா அவரின் காதலியை அடித்து துன்புறுத்தி, கண்டபடி திட்டுவது, கத்தியால் கிழிப்பது, இரும்பால் சூடு வைப்பது போன்ற கொடுமைகளை செய்து வந்துள்ளார். இதனால் அவரின் காதலி அவரிடமிருந்து தப்பி பெற்றோரிடம் ஓடி வந்துள்ளார். ஆனால் அதன் பின்பும் ஹுசைன் ஷா அவரை தொடர்பு கொண்டு உன் பெற்றோரையும், வீட்டையும் கொளுத்தி விடுவேன் என்று அச்சுறுத்தி வந்துள்ளார்.
அப்போது திடீரென அவரை தன் வீட்டில் பார்த்ததும் அதிர்ந்துபோன அவரின் காதலி உடனடியாக காவல் துறையினரை அழைத்து தன்னை காத்துக்கொண்டுள்ளார். இதனால் காவல் துறையினர் சென்சார் மீது அச்சுறுத்தல் மற்றும் வன்முறையில் ஈடுபட்ட குற்றங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் அவருக்கு ஐந்து வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கூறியுள்ளனர். மேலும் இத்தாலியில் கொரோனா தடுப்பு சட்டத்தையும் மீறியதால் அபராதமும் விதிக்கப்படவுள்ளது. மேலும் ஹுசைன் ஷா நிதி நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். இதனால் 15 மில்லியன் பவுண்டுகளுக்கு மேலாக சொத்துக்களை வைத்துள்ளார். மேலும் இங்கிலாந்து மற்றும் இத்தாலி போன்ற நாடுகளிலும் அவரது ஏராளமான சொத்துக்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.