Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தியேட்டரில் 100%இருக்கை இல்லை…. கூடுதல் காட்சிகள் உண்டு…. அரசின் புது உத்தரவு …!!

தமிழக திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதியை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசு சார்பில் தற்போது ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், விமானப் போக்குவரத்து, வணிக வளாகங்கள், வழிபாட்டுத்தலங்கள், கடற்கரைகள், சுற்றுலாத்தலங்கள், படப்பிடிப்பு என பல்வேறு தளர்வுகள் அரசு அளித்துள்ள நிலையில் திரையரங்குகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் கருதி திரையரங்குகள் 100% இருக்கைகள் உடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கையை திரைத்துறையை சார்ந்த சங்கங்கள் விடுத்தனர்.

படிப்படியாக கொரோனா குறைந்து வருவதை கருத்தில் கொண்டும், திரைப்படம் மற்றும் திரையரங்குகளில் பணியாளர்கள் நலனை கருதி மத்திய அரசு 50 சதவீத இருக்கைகள் வரை மட்டுமே பயன்படுத்தி செயல்பட அனுமதித்தபோதிலும் சங்கத்தின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து 100% இருக்கைகளை பயன்படுத்தி திரையரங்கிற்கு தமிழ்நாடு அரசு தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.

தற்போது மத்திய அரசின் அறிவுரையை கருத்தில் கொண்டும், இது குறித்து வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதைக் கருத்தில் கொண்டும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து

திரையரங்குகளிலும் மறு உத்தரவு வரும் வரை 50 சதவீத இருக்கையில் மட்டுமே பயன் படுத்திட பயன்படுத்தி செயல்பட அனுமதி என்பது கொடுக்கப்பட்டதாகவும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி கூடுதல் காட்சிகளுக்கு திரையரங்குக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்,
இந்த என்பது உடனடியாக அமலுக்கு வருவதாகவும, கொரோனா நோய்கள் தொற்று ஏற்படாவண்ணம் முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளி ஆகியவற்றை தவறாமல் திரையரங்குகள் கடைபிடிக்க வேண்டும் என்றும்,  பொது மக்களும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்றும் தற்போது தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Categories

Tech |