Categories
மாநில செய்திகள் வானிலை

இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை வரும் 12 வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் மற்றும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கன மழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கடலூர், திருச்சி, பெரம்பலூர், மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

அடுத்த 24 மணிநேரத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம், ஆகிய மாவட்டங்களில் கனமழையும், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்யும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். வரும் 12ஆம் தேதி வரை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |