Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு… 6 மாவட்டங்கள்… உச்சகட்ட எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஜனவரி 11ஆம் தேதி வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனை அடுத்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மேலும் தீவிரம் அடைந்துள்ளதால், தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நெல்லை, மதுரை, தூத்துக்குடி, சிவகங்கை, திருச்சி மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

இதனைத் தவிர அரியலூர், கரூர், பெரம்பலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 6 மாவட்ட மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |