தமிழ் சினிமாவில் முன்னணி உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் விஜய்யின் படம் வெளியீடு என்றாலே திரையரங்கம் திருவிழா போல இருக்கும். அந்த வகையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ரசிகர்கள் கொண்டாடும் வகையில் 100% இருக்கைகளுடன் திரையரங்கம் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கி இருந்த நிலையில், தற்போது தமிழக அரசு 100% இருக்கை அனுமதியை 50 சதவீத அனுமதியுடன் படத்தையும் திரையிட உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய அரசு, மருத்துவரின் பல்வேறு தரப்பினரின் அறிவுறுத்தலை ஏற்று தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.இதனால் ரசிகர்களின் கொண்டாட்டமானது கேள்விக்குறியாகி உள்ளது. தமிழக அரசு 100 சதவீத இருக்கை உடன் அனுமதி வழங்கிய பட்சத்தில் படத்தை மிகப் பெரும் விழாவாக கொண்டாட காத்திருந்த ரசிகர்களுக்கு தமிழக அரசின் இந்த உத்தரவு சற்று ஏமாற்றத்தை அளிக்கின்றது.