Categories
பல்சுவை

WOW! உங்க போனில் இந்த ஆப் இருக்கா?… அதிரடி அறிவிப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

போன்பே நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஆயுள் காப்பீட்டு திட்டங்களை வழங்குவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் பண பரிமாற்றத்திற்காக செல்போனில் பல்வேறு செயலிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக போன்பே அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறு போன்பே பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு போன்பே நிறுவனம் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி போன்பே நிறுவனம், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து டேர்ம் ஆயுள் காப்பீடு திட்டங்களை வழங்குகிறது.

இதில் இணைய எவ்வித மருத்துவ சோதனைகளோ, ஆவணங்கள் தேவையில்லை. எல்லாவற்றையும் சில நிமிடங்களில் போன் பே செயலி மூலமாகவே முடித்துவிடலாம். இந்தத் திட்டத்தில் 18 முதல் 50 வயதினர் இணைந்து கொள்ளலாம். இத்திட்டங்களில் குறைந்தபட்ச ஆண்டு பிரீமியம் ரூ.149- ல் தொடங்குகிறது. அசம்பாவிதம் ஏற்பட்டால் ஒரு லட்சம் முதல் 20 லட்சம் வரை காப்பீடு தொகை கிடைக்கும். அதனால் இதனை தவறவிடாமல் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |