பிரிட்டன் மக்கள் 5 நாட்களுக்குள் நாடு திரும்ப வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் மக்களுக்கு ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது வெளிநாடுகளில் இருக்கும் பிரிட்டன் மக்கள் 5 நாட்களுக்குள் நாடு திரும்ப வேண்டும். அவ்வாறு அவர்கள் ஐந்து நாட்களுக்கு திரும்பவில்லை எனில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு நெகட்டிவ் என்று நிரூபித்தால் மட்டும்தான் பிரிட்டனிற்குள் அனுமதிக்கப்படுவார்கள். இல்லையெனில் அவர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதி கிடையாது என்று பிரிட்டன் போக்குவரத்து செயலர் இன்று அறிவித்துள்ளார். இந்நிலையில் சுமார் ஒரு லட்சம் பிரிட்டன் மக்கள் வெளிநாடுகளில் தங்கியிருக்கின்றனர். இதனால் இந்த விதி முறையானது அடுத்த புதன் அல்லது வியாழக்கிழமைகளில் நடைமுறைக்கு வரவுள்ளது.
இதனால் அவசர அவசரமாக நாடு திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் இந்த வாய்ப்பை தவற விடுபவர்களுக்கு முறையான பாஸ்போர்ட், விசா மற்றும் கொரோனா நெகட்டிவ் காட்டும் ஆதாரம் இல்லையெனில் பிரிட்டன் விமானம், ரயில் மற்றும் கப்பல் போன்ற எதன் மூலமாகவும் நாட்டிற்குள் செல்ல அனுமதி கிடைக்காது என்று பிரிட்டன் போக்குவரத்து செயலாளர் Grant Shapes தெரிவித்துள்ளார். மேலும் நாடு திரும்பும் மக்களுக்கு கொரோனா இல்லை என்ற ஆதாரம் இருந்தாலும் தங்களை 10 நாட்களாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்.