Categories
தேசிய செய்திகள்

ரயில்வே டிக்கெட்… ரத்து செய்யப் போறீங்களா… அப்ப இத பண்ணுங்க..!!

பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளை நீங்கள் ரத்து செய்ய விரும்பினால் முதலில் இதை செய்யுங்கள்.

முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் ரத்து செய்வதற்கு ஆறு மாதம் முதல் 9 மாதம் வரை கால அவகாசத்தை நீட்டிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ரயில்வே ரத்து, செய்யப்பட்ட கால அட்டவணை ரயில்களுக்கு மட்டும் இது பொருந்தும். 139 மூலமாகவோ, ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாகவோ டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் பயண தேதியிலிருந்து 9 மாதங்கள் வரை முன்பதிவு கவுண்டரில் டிக்கெட்டுகளை சமர்பிக்கலாம்.

இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பயண தேதியிலிருந்து 6 மாதங்கள் கழிந்த பின்னர் பல பயணிகள் டிக்கெட்டுகளை மண்டல ரயில்வேயின் உரிமைகோரல் அலுவலகத்திற்கு டிடிஆர் மூலமாகவோ அல்லது அவர்களுடன் பொது விண்ணப்பத்தின் மூலமாகவோ டெபாசிட் செய்து இருக்கலாம். அத்தகைய பயணிகளுக்கு முழுவதும் கட்டணம் திரும்ப வழங்கப்படும்.கொரோனா காரணமாக டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கும், கட்டணம் திருப்பி செலுத்துவதற்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டன.

ரயில்வே ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு பிஆர்எஸ் கவுண்டர் கட்டணம் திரும்பி வழங்கப்பட்டது. ரயில் டிக்கெட்டுகள் 139 மூலம் பயண தேதியிலிருந்து 6 மாதங்கள் வரை கவுண்டரில் திருப்பி செலுத்தப்பட்டது. ஊரடங்கு காலத்தில் வழக்கமான ரயில்கள் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் டிக்கெட் ரத்து செய்வதற்கான கால அவகாசம் மூன்று நாட்களிலிருந்து மூன்று மாதங்களுக்கும், மே மாதத்திலிருந்து ஆறு மாதமும் நீடிக்கப்பட்டது. வைரஸ் பரவுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |