Categories
உலக செய்திகள்

இரட்டை கொள்ளை சம்பவங்களில்… ஈடுபட்ட பெண் தலைமறைவு… காவல்துறையினர் கோரிக்கை…!!

பெண் ஒருவர் இரண்டு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

லண்டனைச் சேர்ந்த Tamara Clifton என்ற 40 வயதுடைய பெண் கடந்த ஆகஸ்ட் மாதம் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற இரண்டு கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளார் என்று காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் காவல்துறையினரால்  கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ஜாமீனில் வெளியில் வந்த அவர் சட்டத்தை மீறி தலைமறைவாகியுள்ளார்.

இதனால் காவல் துறையினர் அவரின் புகைப்படத்தை வெளியிட்டு இவரை கண்டால் உடனடியாக தங்களிடம் தெரிவிக்குமாறு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து டிடெக்டிவ் அதிகாரி ரொவினா டொனி என்பவர் கூறுகையில் இவரை உடனடியாக கண்டுபிடிப்பதற்காக நாங்கள் விரிவான விசாரணைகளை நடத்தி வருகிறோம். மேலும் இவரை யாராவது பார்த்தால் அல்லது அவர் தங்கியிருக்கும் இடம் குறித்த விவரங்கள் அறிந்தால் காவல்துறையினரை தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |