Categories
தேசிய செய்திகள்

எங்கு பார்த்தாலும் புதுமை…முழுவதும் பசுமையாக்கம்…திருப்பதியில் புதிய திட்டம் …!!

பக்தர்களைக் கவரும் வண்ணம் திருப்பதியில் அதிக இடங்களில் மரம் வளர்ந்து பசுமையாக்க திட்டத்தை செயல்படுத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆந்திர பிரதேஷ் மாநிலத்தில் உள்ள திருப்பதியில் ஊரடங்கு தளர்வு காரணமாக, வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கு பின்பு தினமும் 40 ஆயிரம் பக்தர்கள் சுவாமியை தரிசிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதோடு பக்தர்கள் மலை மீது ஏறுவதற்கும், இறங்குவதற்கும் என இரண்டு பிரத்தியேக சாலைகள் அமைக்கப்பட்டு பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நடைபயணமாக சுவாமியை தரிசிக்க செல்பவர்களுக்கு ஏற்றவாறு படிக்கட்டுகளும், சமதளப்பரப்பும் உள்ளவாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அலிபிரியில் இருந்து திருமலைக்கு செல்லும் பாதையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹர் ரெட்டி தலைமையில் ஒரு ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் அலிபிரி நடை பாதை சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்குமாறும், வருகின்ற ஜூன் மாதம் முதல் நடைபாதையானது பக்தர்கள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் தலைமை பொறியாளர் ஸ்ரீ ரமேஷ் ரெட்டியிடம் கூறினர்.

மேலும் எஸ்.வி.மியூஸியத்தில் பக்திமயமான சூழலை உருவாக்கவும், திருமலையில் பக்தர்கள் தங்கும் அறைகளை பழுதின்றி சரிசெய்யவும் அக்கூட்டத்தில் ஆலோசித்தனர். அங்கு சாமி சிலைகள், பிரத்தியேக பொருட்கள் மற்றும் கோவிலின் வடிவமைப்பு போன்றவை அழகாக இடம்பெற வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அதோடு அதிகாரி ஸ்ரீ சந்திரசேகர் மற்றும் தோட்ட மேற்பார்வையாளர் ஸ்ரீ ஸ்ரீநிவாசலு ஆகியோருக்கு திருமலையில் பசுமையான பகுதிகளை மேலும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதனையடுத்து படா கங்கம்மா கோவிலில் அருகிலும்,  திருமலையில் உள்ள பாறை சூழ்ந்த பகுதிகளிலும் பைலட் திட்டத்தின் மூலம் பசுமையாக்கி அங்குள்ள சாலைகளின் நடுவே சிறிய தோட்டங்களை அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இந்த ஆலோசனை கூட்டம் ஆனது பக்தர்களைக் கவரும் வண்ணம் அன்னமாச்சார்யா சங்கீதங்களை செயல்படுத்த வேண்டும் என்றும், அதிகப்படியான மாற்றங்களை கொண்டுவரவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

Categories

Tech |