Categories
உலக செய்திகள்

ஒரே நாளில்… உலகின் முதல் பணக்காரரான நபர்… பின்னுக்கு தள்ளப்பட்ட அமேசான் நிறுவனர்…!!

நபர் ஒருவர் ஒரே நாளில் அமேசான் நிறுவனரை பின்னுக்கு தள்ளி உலகின் முதல் பணக்காரராகியுள்ளார். 

உலகின் பணக்காரகள் பட்டியலில் வெளியிடப்பட்டிருந்தது. அதில் முதல் இடத்தை பிடித்த அமேசான் நிறுவனர் பிடித்திருந்தார். ஆனால் தற்போது அவரை பின்னுக்கு தள்ளி ஒருவர் முன்னேறியுள்ளார். அவர் தென் ஆப்பிரிக்காவில் பிறந்து கனடாவிலும் அமெரிக்காவிலும் குடியுரிமை பெற்ற டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளர் எலான் மஸ்க் (49).

அதாவது கடந்த புதன்கிழமை நிலவரத்தின்படி இவரின் ஒட்டு மொத்த சொத்துக்களின் மதிப்பு 181 பில்லியன் டாலர்களாக இருந்துள்ளது. மேலும் அமேசான் நிறுவனர் ஜெப் மெஸோஸின் ஒட்டுமொத்த சொத்துக்களின் மதிப்பு 184 பில்லியன் டாலர்களாக இருந்துள்ளது. ஆனால் ஒவ்வொரு நாளும் டெஸ்லா நிறுவனத்தின் பங்கு மதிப்பு 10 மில்லியன் ஏறி வருகிறது. இதனால் நேற்று ஒரே நாளில் 188.5 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. இதனால் ஒரே நாளில் எலான் மஸ்க், அமேசான் நிறுவனரை பின்னுக்கு தள்ளி உலகின் முதல் பணக்காரர் ஆகிவிட்டார்.

Categories

Tech |