மனைவி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்றதால் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சொக்கம்புதூரில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்து பின் ஓய்வு பெற்றார். இவருக்கு வேறு இரண்டு பெண்களுடன் தொடர்பு இருந்ததை தெரிந்து கொண்ட அவரது மனைவி பாலசுப்பிரமணியத்தை கண்டித்துள்ளார். இதனையடுத்து அவரது மனைவி கோபத்தில் ஈரோட்டில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் மனமுடைந்த முதியவர் பாலசுப்பிரமணியம் நேதாஜி நகரில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ஆர்.எஸ்.புரம் போலீசார் விரைந்து சென்று பாலசுப்பிரமணியத்தின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த விசாரணையில், பாலசுப்பிரமணியத்துக்கு வேறு இரண்டு பெண்களுடன் கள்ளத் தொடர்பு இருந்ததை அறிந்த அவரது மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் விரக்தியில் முதியவர் தற்கொலை செய்து கொண்டது போலீசாருக்கு தெரியவந்துள்ளது.