பிரான்சில் இரவுநேர ஊரடங்கில் குறிப்பிட்ட 10 மாவட்டங்களுக்கு நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பிரிட்டனில் உருவான உருமாறிய கொரனோ வைரஸ் காரணமாக பிரான்சில் கடுமையான விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே இரவு நேரங்களில் 10 மாவட்டங்களுக்கு ஊரடங்கில் மாற்றம் கொண்டு வந்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். அதாவது நாடு முழுவதும் இரவு 8 மணி முதல் இரவு நேரத்திற்கான ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது.
மேலும் கடந்த வாரத்திலிருந்து குறிப்பிட்ட 15 மாவட்டங்களுக்கு மட்டும் மாலை 6 மணி முதலே ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த நேரத்திற்கான மாற்றம் மேலும் 10 மாவட்டங்களுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மேலும் குறிப்பிட்ட இந்த 10 மாவட்டங்களும் ஆபத்து வளையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த 10 மாவட்டங்களுக்கு மாலை 6 மணி முதலே ஊரடங்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த கட்டுப்பாடு வரும் ஞாயிற்றுக் கிழமையிலிருந்து நடைமுறைக்கு வரவுள்ளது. அந்த 10 மாவட்டங்கள் Haut-Rhin, Bas-Rhin, Cote d Or, Yonne, Cher, Allier, Haute-Savoie, Alpes-de-Haute-Provence, Vaucluse, Bouches-du-Rhone ஆகும்.