Categories
சினிமா தமிழ் சினிமா

`”வல்லவனுக்கும் வல்லவன்” 4 வேடத்தில் அசத்தும் பிரபல நடிகர்..!!

பாபிசிம்ஹா “வல்லவனுக்கும் வல்லவன்”என்ற படத்தில் 4 வேடங்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.

நடிகர் திலகம் என்று அழைக்கப்படும் சிவாஜிகணேசன் ‘நவராத்திரி’ என்ற படத்தில் 9 வேடங்களிலும், உலக நாயகன் கமல்ஹாசன் `தசாவதாரம்’ படத்தில் 10 வேடங்களிலும்  நடித்து சாதனை படைத்துள்ளனர். இவர்களைப் போலவே  பிரபல நடிகர்கள் 2 , 3 வேடங்களில் நடித்து இருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் பாபிசிம்ஹா,”வல்லவனுக்கும் வல்லவன்” என்ற படத்தில் 4 வேடங்களில் நடித்து இருக்கிறார்.

Related image
இவருடன்  ஷிவதா, நெப்போலியன், கருணாகரன், ஆனந்தராஜ், சங்கிலிமுருகன், அப்புக்குட்டி ஆகியோர்  நடித்துள்ளனர்.  விஜய் தேசிங் இயக்கியிருக்கும் இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ், லிப்ரா புரொடக்‌ஷன், அசால்ட் புரொடக்சன் ஆகிய 3 பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிகட்ட பணிகள்  முழுவதுமாக முடிவடைந்து விட்டது.  விரைவில்  இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

Categories

Tech |