வங்கி toll-free எண்களை பயன்படுத்தி பல்வேறு மோசடிகள் நடந்து வருவதாக ரிசர்வ் வங்கி எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பல்வேறு பகுதிகளில் வங்கியிலிருந்து அழைப்பதாக கூறி அவர்களின் வங்கிக் கணக்கைக் கேட்டு மோசடியில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. வங்கி எண்கள், மொபைல் எண்களைபோல், போலி எண்களை பயன்படுத்தி புதிய மோசடியை நடத்திவருகின்றனர். ரிசர்வ் வங்கியின் டிபார்ட்மென்ட் ஆஃப் சூப்பர் விஷன், மத்திய அலுவலகம் சைபர் பாதுகாப்பு மற்றும் அதன் குழு வழங்கிய தகவலின்படி டோல் பிரீ எண்களைப்போல, மொபைல் எண்களை போலி எண்களை பயன்படுத்தி மோசடியில் பலர் ஈடுபட்டு வருகின்றனர் என எச்சரித்துள்ளது.
மேலும் இந்த போலி மொபைல் எண்கள் ட்ரூகாலர் போன்ற மூன்றாம் தரப்பு செயலிகளின் மூலம் சரி பார்க்கும் போது அதிலும் அழைப்பாளர்கள் பெயர் வங்கிகளின் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறியுள்ளனர். இதன் மூலம் போலி எண்கள் ட்ரூ காலர் உதவியுடன் மோசடி குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் கூறுகின்றனர். வங்கிகளின் டோல் பிரீ எண் 1800 321 4231 இவ்வாறு இருக்கும். மோசடி செய்யும் கும்பல் உண்மையான எண்ணை ஒத்து இருப்பது போல 1811 321 4231 இது போன்ற எண்ணை பயன்படுத்துகின்றனர்.
இந்த அழைப்பு டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு நம்பர், கடவுச்சொல், ஓடிபி போன்ற முக்கிய விவரங்களை வழங்குமாறு கேட்டு அதன் மூலம் பணத்தை திருடி வருகின்றனர். எந்த ஒரு வங்கியும் உங்கள் வங்கி கணக்கின் ரகசிய விவரங்களை கேட்டுக் கொள்வது கிடையாது. யாராவது உங்களது மொபைலில் இவ்வாறான தகவல்களை தெரிவிக்க சொன்னால் உடனே அந்த அழைப்பை துண்டித்து விடுங்கள் என ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.