Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

கலெக்ட்டருக்கு இப்படியா செய்வீங்க ? புதுவையில் நடந்த பரபரப்பு…. டிஜிபி அதிரடி உத்தரவு …!!

மாவட்ட ஆட்சியருக்கு நச்சு கலந்த குடிநீர் வழங்கிய விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்த மாநில காவல்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரியிலுள்ள வழுதாவூர் சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டமானது கடந்த புதன்கிழமை நடைபெற்றது. அப்போது அந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் குடிநீர்பாட்டில், காபி போன்றவைகளை அலுவலக ஊழியர்கள் கொடுத்தனர். அந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பின்பு பூர்வா கார்க் தனக்கு கொடுக்கப்பட்ட பாட்டிலில் இருந்து தண்ணீர் குடிக்க முயன்ற போது, அதில் இருந்து ஒருவிதமான வாசனை வீசியதை உணர்ந்தார்.  இதனால் சந்தேகமடைந்த மாவட்ட கலெக்டர் அந்த தண்ணீரை குடிக்கவில்லை.

இதனையடுத்து  அந்த பாட்டினுள் பார்த்தபோது ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட கிருமிநாசினி(சானிடைசர்) அந்த பாட்டிலினுள் நிரப்பப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து அதிகாரிகளும், மாவட்ட கலெக்டரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். எனவே இச்சம்பவம் குறித்து கோரிமேடு காவல் நிலையத்தில் கலெக்டர் அலுவலக சிறப்பு அதிகாரி சுரேஷ் ராஜ் என்பவர் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து அதிகாரிகளுக்கும் சரியான குடிநீர் பாட்டில் கொடுக்கப்பட்டும், கலெக்டருக்கு மட்டும் கிருமிநாசினி நிரப்பப்பட்ட பாட்டில் வந்தது எப்படி என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 284 இன் படி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது. மேலும் உணவு பாதுகாப்பு துறையிடம் நச்சு கலந்த அந்த குடிநீர் பாட்டிலை பரிசோதனை செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியருக்கு நச்சு குடிநீர் வழங்கப்பட்ட வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த மாநில காவல்துறை டிஜிபி, சிபிசிஐடிக்கு உத்தரவிட்டுள்ளார். கடந்த மாதம் கொரோனாதொற்று ஏற்பட்டதன் காரணமாக புதுச்சேரியில் கலெக்டராக இருந்த அருண் என்பவர் விடுப்பில் சென்ற காரணத்தால் சுற்றுலாத் துறை செயலராக இருந்த பூர்வா கார்கை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அவர்கள் மாவட்ட பொறுப்பு ஆட்சியராக நியமித்தார். அதன்பிறகே இவர் மாவட்ட ஆட்சியராக பதவி வகிக்கிறார் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |