பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவி வருகின்றது. இந்நிலையில் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் தமிழகத்தில் தரவுகளுடன் கூடிய அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களுக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டும், கடுமையாக்கப்பட்டும் கொரோனா பரவலுக்கு ஏற்றார்போல உத்தரவிடப்பட்டு வருகிறது. பெரும்பாலும் கோவில்களுக்கு மக்கள் இயல்பாகவே அதிக அளவில் செல்வது வழக்கம். ஆனால் தை மாதத்தில் முருகன் கோயிலுக்கு மக்கள் அதிகளவில் செல்வது வழக்கம்.
அந்த வகையில் பழனி கோவில் நிர்வாகம் சார்பாக தற்போது அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஜனவரி மாதம் 14ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கபடும்என்றும், பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என்று தெரிவித்துள்ளது.