Categories
தேசிய செய்திகள்

அதிகாலை 2 மணிக்கு…. பற்றி எறிந்த மருத்துவமனை… 10 பிஞ்சு குழந்தைகள் உயிரிழப்பு…!!

10 பிஞ்சு குழந்தைகள் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பண்டாரா மாவட்டத்தில் அரசு பொது மருத்துவமனை அமைந்துள்ளது. இன்று அதிகாலை திடீரென அந்த மருத்துவமனையில் பிஞ்சுக் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் பலத்த தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த பத்து குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தது.

மேலும் 7 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணர் பிரமோத் கண்டெண்ட் கூறுகையில், “அதிகாலை 2 மணியளவில் எதிர்பாராதவிதமாக நடந்த தீ விபத்தில் இருந்து ஏழு குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை கொடுத்து வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |